தேசிய பொறியாளர் தினம்


தேசிய பொறியாளர் தினம்
x

புதுவையில் கொண்டாடப்பட்ட தேசிய பொறியாளர் தினத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார்.

புதுச்சேரி

தேசிய பொறியாளர் தினம் புதுவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித்துறை செயலாளர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, புதுவையின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பொறியாளர்களின் பங்கு குறித்தும், தற்போது ஏற்பட்டுள்ள மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப புதுவையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் பொறியாளர்கள் திறம்பட கையாள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

சுற்றுலா நகரமான புதுவையின் பாரம்பரியமிக்க சிறப்பையும், அழகையும் பாதிக்காத வகையில் இந்த திட்டங்கள் அமையவேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றம் சிறந்த மாணவர் அமைப்பிற்கான விருதுகளையும் வழங்கினார். முடிவில் என்ஜினீயர் திருஞானம் நன்றி கூறினார்.


Next Story