இசை வெளியீட்டு விழா
மதகடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியும், பீக் மியூசிக் குழுவும் இணைந்து ரியல் ஹீரோ எனும் தலைப்பில் இசை வெளியீட்ப்பட்டது.
திருக்கனூர்
புதுச்சேரி மதகடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியும், பீக் மியூசிக் குழுவும் இணைந்து தந்தை- மகள் பாச உணர்வுகள், தந்தையின் அர்ப்பணிப்பு, தியாக உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ரியல் ஹீரோ எனும் தலைப்பில் இசை வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. ஞானகாரவேல் பாடல் எழுத, அதிதி ஆனந்தன் பாட, எஸ்.எஸ்.குமரன் இசையில் இந்த இசை ஆல்பம் உருவாகியுள்ளது.
விழாவில் தக்கஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் ஸ்ரீமணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், இசை சி.டி.யை வெளியிட்டார். கல்லூரியின் துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை விகத்தனர். கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார்.
விழாவில் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், கல்லூரியின் ஆராய்ச்சி துறை டீன் வேல்முருகன், வேலைவாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி, அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை டீன் முகமது யாசின், பிசியோதெரபி டீன் சிதம்பரம், சட்ட கல்வித்துறை டீன் சந்திரசேகர் மற்றும் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் எஸ்.எஸ்.குமரன் நன்றி கூறினார்.