மோட்டார் சைக்கிள் திருடன் கைது
மாகி பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலம் மாகி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் இன்று அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த நபரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது, கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த சமீர் (வயது 33) என்பதும், அவர் திருட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story