மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
திருபுவனையில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை
திருபுவனை கடைதெருவில் நேற்று காலை ஒருவா் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்ட முடியாமல் தடுமாறி கீழே விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது அவர் போதையில் தன்னை மறந்து மோட்டார் சைக்கிளை திருபுவனை பாளையம் சாலையில் இருந்து திருடி வந்ததாக உளறினார்.
உடனே பொதுமக்கள் அவரை பிடித்து கைகளை கட்டி டீக்கடையில் பிடித்து வைத்து திருபுவனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஏட்டு ஜானகிராமன் மற்றும் போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் கண்டமங்கலம் அருகே பள்ளிபுதுப்பட்டு காலனியை சேர்ந்த முருகவேல் (வயது 40) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story