வணிகர் தின விழா
அரியாங்குப்பத்தில் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் வணிகர் தின விழா நடைபெற்றது.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் வணிகர் தின விழா இன்று அரியாங்குப்பத்தில் கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இலவசமாக மோர், பழ வகைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சங்க துணைத் தலைவர்கள் ஆறுமுகம், மலையாளத்தார், செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைச் செயலாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.
Related Tags :
Next Story