தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை


தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை
x

அரியாங்குப்பம் சொர்ணா நகரை சேர்ந்த கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் சொர்ணா நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 62). கொத்தனார். அவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற புருஷோத்தமன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் அரியாங்குப்பம் சுப்பையா நகர் லெனின் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் புருஷோத்தமன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற அரியாங்குப்பம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story