மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
பெண் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருபுவனை
பெண் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் கொம்யூன் செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மாதர் சங்க துணை தலைவர் சுதா சுந்தரராமன், பிரதேசக்குழு செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், சீனுவாசன், சத்தியா பிரதேச குழு சங்கர், வக்கீல் தட்சிணாமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் திருபுவனை தொகுதி செயலாளர் ஈழவளவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெண் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story