வியாபாரியிடம் மாமூல் கேட்டு பணம், செல்போன் பறித்தவர் கைது


வியாபாரியிடம் மாமூல் கேட்டு பணம், செல்போன் பறித்தவர் கைது
x

வில்லியனூரில் வியாபாரிடம் மாமூல் கேட்டு மிரட்டி பணம், செல்போனை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

வில்லியனூரில் வியாபாரிடம் மாமூல் கேட்டு மிரட்டி பணம், செல்போனை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மாமூல் கேட்டு மிரட்டல்

வில்லியனூர் கூடப்பாக்கம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 44). விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வில்லியனூர் மார்க்கெட் வீதியில் நேற்று சிலைகளை வைக்கும் மரப்பலகை விற்பனையில் ஈடுபட்டார்.

இரவு ஆனதால் அங்கேயே பொருட்களுடன் கந்தசாமி இருந்தார். நள்ளிரவு 1.30 மணி அளவில் அங்கு வந்த கணுவாப்பேட்டையை சேர்ந்த புண்ணியக்கோடி என்பவர் கந்தசாமியிடம் கடை நடத்த மாமூல் கேட்டுள்ளார். பணம் தர மறுத்தால் கை, கால்களை உடைத்துவிடுவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன கந்தசாமி தன்னிடம் இருந்த ரூ.500-யை கொடுத்தார்.

கைது

ஆனால் தனக்கு ரூ.500 போதாது எனக்கூறி கந்தசாமி சட்டைப்பையில் இருந்த செல்போனை பறிக்கொண்டு புண்ணியக்கோடி அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதுகுறித்து வில்லியனூர் போலீசில் கந்தசாமி அளித்த புகாரின்பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிக்காசலம் வழக்குப்பதிவு செய்து புண்ணியக்கோடியை கைது செய்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story