வணிக வளாக தியேட்டர்களை நடிகர் விஜய் ரசிகர்கள் முற்றுகை


வணிக வளாக தியேட்டர்களை நடிகர் விஜய் ரசிகர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 Oct 2023 11:29 PM IST (Updated: 18 Oct 2023 4:03 PM IST)
t-max-icont-min-icon

'லியோ' பட சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கக்கோரி வணிக வளாகத்தில் உள்ள தியேட்டர்களை நடிகர் விஜய் ரசிகர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

'லியோ' பட சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கக்கோரி வணிக வளாகத்தில் உள்ள தியேட்டர்களை நடிகர் விஜய் ரசிகர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

லியோ திரைப்படம்

நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நாடு முழுவதும் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படத்தை வரவேற்கும் விதமாக விஜய் ரசிகர்கள் புதுவை நகர பகுதிகளில் கட்-அவுட், பேனர்கள் வைத்துள்ளனர். புதுவையில் 15-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

இதற்கிடையே புதுவையில் நாளை மறுநாள் முதல் வருகிற 24-ந் தேதி வரை காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

முற்றுகை போராட்டம்

புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் (மால்) 5 தியேட்டர்கள் உள்ளன. இந்த 5 தியேட்டர்களிலும் லியோ படம் திரையிடப்படுகிறது. ஆனால் அங்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டது.

இதையறிந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் 300-க்கும் மேற்பட்டோர் வணிக வளாக தியேட்டர் உரிமையாளரை சந்தித்து சிறப்பு காட்சி திரையிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது அவர் தியேட்டர்களில் ரசிகர்களுக்கு தனியாக சிறப்பு காட்சிகள் கிடையாது என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் மற்ற தியேட்டர்களை போல் இங்கும் சிறப்பு காட்சி நடத்த வேண்டும். அதில் 50 சதவீதம் டிக்கெட்டுகளை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 5-வது மாடியில் உள்ள தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

50 சதவீத டிக்கெட்

தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விஜய் ரசிகர்களை தியேட்டர் உரிமையாளர் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், காலை 7 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிகளில் ரசிகர்களுக்கு 50 சதவீத டிக்கெட் வழங்க சம்மதம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story