ரூ.1.50 கோடியில் ஏரி தூர்வாரும் பணி
ஏம்பலம் தொகுதியில் ரூ.1.50 கோடியில் ஏரி தூர்வாரும் பணியை அமைச்சர் சாய்.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
பாகூர்
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் குடியிருப்புபாளையம் எல்லையில் உள்ள பாகூர் ஏரி ரூ.54 லட்சத்து 59 ஆயிரம் செலவில் தூர்வாரப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.சரவணன்குமார், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதேபோல் அரங்கனூர் மதகு முதல் எரமுடி அய்யனார் கோவில் மதகு வரையும், ஈச்சங்காடு கிராமத்தில் இருந்து வம்பாபேட் வரை வாய்க்கால் தூர்வாரும் பணியும், ஈச்சங்காட்டில் இருந்து பனித்திட்டு வரை தூர்வாரும் பணியும் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகுமரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.