கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்


கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்
x

பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. மிஸ் கூவாகம் ஆக புதுச்சேரி பாவ்யா தேர்வு செய்யப்பட்டார்.

வில்லியனூர்

பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. மிஸ் கூவாகம் ஆக புதுச்சேரி பாவ்யா தேர்வு செய்யப்பட்டார்.

மிஸ் கூவாகம் தேர்வு

வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு கூத்தாண்டவர் சாமிக்கு திருக்கல்யாணமும், பக்தர்களுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று தாலி கட்டிக்கொண்டனர்.

இதனிடையே மாலை 6 மணிக்கு திருநங்கைகளுக்கான 'மிஸ் பிள்ளையார்குப்பம்' அழகிபோட்டி நடந்தது. இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கோல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். மேடைகளில் ஒய்யாரமாக நடைபோட்டு பார்வையாளர்களை அசத்தினர். தமிழ் பாரம்பரிய உடை, நவீன ஆடை மற்றும் நடனம் ஆகிய 3 பிரிவுகளில் போட்டி நடந்தது. முடிவில் மிஸ் கூவாகமாக புதுச்சேரி பவ்யா தேர்வு செய்யப்பட்டார்.

தேரோட்டம்

2-வது இடம் கடலூர் சாக்ஷி, 3-வது இடம் சென்னை வர்ஹா, 4, 5-ம் இடம் முறையே புதுச்சேரி பூஜா மற்றும் ஐஸ்வர்யா தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி பரிசுகள் வழங்கினார்.

இதனைதொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. தேர் மாடவீதி வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அழுகளம் மற்றும் இரவு சாமி வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து மே 18-ந் தேதி படுகளம் எழுப்புதல் நடக்கிறது.


Next Story