கந்தூரி விழா கொடியேற்றம்
காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லா தர்காவில் கந்தூரி விழா வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 200-வது கந்தூரி விழா வரும் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வருகிற 11-ந் தேதி இரவு ஹலபு எனும் போர்வை வீதியுலா, சந்தனக்கூடு புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து 12-ந்தேதி அதிகாலை சந்தனம் பூசுதல், 14-ந் தேதி கொடியிறக்கம் நடக்கிறது.
விழாவையொட்டி, தர்கா வளாகத்தில் ரதம் மற்றும் பல்லக்கு தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழா குறித்து புதுச்சேரி வக்பு வாரிய உறுப்பினர் முகமது ஜாஹிர் உசேன் நிருபர்களிடம் கூறுகையில் '200-வது கந்தூரி விழா என்பதால் சிறப்பு நூல் வெளியிடப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம் என்றார்.
Related Tags :
Next Story