மல்லிகை பூ கிலோ ரூ.2,500-க்கு விற்பனை
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையையெட்டி மல்லிகை பூ கிலோ ரூ.2,500-க்கு விற்கப்பட்டது.
புதுச்சேரி
புதுச்சேரிக்கு தேவையான பூக்கள் வெளி மாநிலங்களில் இருந்தும், புதுவை சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகையை பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்தநிலையில் நேற்று கிலோ ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை ஒரேநாளில் கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பபட்டது. கனகாம்பரம்- ரூ.600, அரளி-ரூ.400, ரோஜா-ரூ.160, சம்பங்கி- ரூ.120 விற்பனை ஆனது. மல்லிகை பூ உற்பத்தி பாதிப்பு மற்றும் வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்வு காரணமாக பெண்கள் மல்லிகை பூ வாங்க ஆர்வம் காட்டவில்லை. அதற்கு பதிலாக விலை குறைவான ரோஜா உள்ளிட்டவற்றை வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story