சண்டிகேஸ்வரர் சன்னதி விமான தளத்தில் வெள்ளி தகடுகள் பொருத்தும் பணி


சண்டிகேஸ்வரர் சன்னதி விமான தளத்தில் வெள்ளி தகடுகள் பொருத்தும் பணி
x

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரர் சன்னதி விமான தளத்தில் வெள்ளி தகடுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரர் சன்னதி விமான தளத்தில் வெள்ளி தகடுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மணக்குள விநாயகர் கோவில்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் உள்ள கோபுரம் செப்பு தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த தகடுகள் நிறம் மாறி காட்சி அளித்ததால் அதை மாற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக அவர்கள் தனியார் தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து சண்டிகேஸ்வரர் கோவில் விமான தளத்திற்கு ரூ.35 லட்சம் செலவில் சுமார் 45 கிலோ அளவில் வெள்ளி தகடுகளால் கோபுரம் அமைக்க தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.

பணிகள் தொடங்கியது

இந்த கோபுரம் அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. இதனால் மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்தப் பணிகளை 15 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக குழு தலைவர் ராமச்சந்திரன், நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story