சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு


சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
x

வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுச்சேரி

வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோடை வெயில்

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கோடை தொடங்கியதுபோல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இருந்தபோதிலும் புதுவைக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன.

நண்பர்கள், குடும்பங்கள் என கும்பல் கும்பலாக சுற்றுலா பயணிகள் ஒயிட் டவுன் பகுதியில் சுற்றி வருகின்றனர். தற்போது மோட்டார் சைக்கிளை வாடகைக்கு விடுவது அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் வாடகை நிலையங்களில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவர்கள் முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் அதிகரிக்கும்

புதுச்சேரி கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, பாண்டி மெரினா என எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

அதுமட்டுமின்றி இப்போது நகரப்பகுதியில் பல்வேறு இடங்களில் ரெஸ்ட்ரோட் பார்கள் திறக்கப்பட்டுள்ளதால் அங்கும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது. தற்போது பள்ளி இறுதி தேர்வுகள் தொடங்க உள்ளன. தேர்வுகள் முடிந்ததும் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சண்டே மார்க்கெட்டிலும் வழக்கம்போல் உள்ளூர், வெளியூர் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.


Next Story