மனதை செம்மைப்படுத்தினால் எதையும் சாதிக்க முடியும்


மனதை செம்மைப்படுத்தினால் எதையும் சாதிக்க முடியும்
x

மனதை செம்மைப்படுத்தினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

புதுச்சேரி

மனதை செம்மைப்படுத்தினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

அரவிந்தரின் கனவு

ஆரோவிலில் நடைபெற்ற ஆன்மிக கருத்தரங்கில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

அரவிந்தர் மற்றும் அன்னையின் கனவு ஜனாதிபதியின் வருகையால் நினைவாகியுள்ளது. ஜனாதிபதி மிக கடுமையாக உழைத்து முன்னேறி ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். அரவிந்தர், அன்னை ஆகியோர் பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைத்தனர். ஆரோவில்லை கண்காணித்து கொண்டிருப்பதற்காக ஜெயந்தி ரவியை பாராட்டுகிறேன்.

நாம் தேசத்தின் விடுதலைக்காக போராடி கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கு ஆன்மிக விடுதலை தேவை என அரவிந்தர் கூறியிருந்தார். அதனால் அவர் இந்த மண்ணில் (புதுவையில்) அடியெடுத்து வைத்தவுடன், நம் நாட்டின் சிறப்பம்சங்களை எடுத்துக்கூறி வந்த போதிலும் யோகாவில் அவர் கவனம் செலுத்தினார்.

சாதிக்க முடியும்

பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுப்பினால் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா இந்தியாவில் மட்டுமில்லை, 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அதில் 90-க்கும் மேற்பட்ட நாடுகள் இஸ்லாமிய நாடுகள்.

அதைபோல் அனைவரிடத்திலும் துணிவு இருக்க வேண்டும் என்று அன்னை விரும்பினார். மாத்ரி மந்திர், உங்கள் மனதை செம்மைப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது. அதுபோல நம் மனதை செம்மைப்படுத்தினால், நம்மால் எதையும் சாதிக்க முடியும். இந்த கருத்தைத்தான் ஸ்ரீஅரவிந்தரும், விடுதலை போராட்ட வீரர்களும், நம் முன்னோர்களும் கூறுகிறார்கள். அதை நாம் கடைபிடிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story