குபேர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


குபேர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் குபேரின் நினைவு நாள் அரசு சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது.

புதுச்சேரி

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் குபேரின் நினைவு நாள் அரசு சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை பாரதி பூங்காவில் உள்ள குபேரின் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு சபாநாயகர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், பாஸ்கர், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், நீல கங்காதரன் உள்பட பலர் குபேர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story