சுகாதாரத்துறை ஊழியர்கள் தலைமை செயலகம் நோக்கி ஊர்வலம்


சுகாதாரத்துறை ஊழியர்கள் தலைமை செயலகம் நோக்கி ஊர்வலம்
x

புதுவை சுகாதாரத்துறை ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தலைமை செயலகம் நோக்கி ஊர்வலம் நடத்தினர்.

புதுச்சேரி

புதுவை சுகாதாரத்துறையை மருத்துவ கல்வித்துறை, சுகாதாரத்துறை நிர்வாகம், பொது சுகாதாரம் என 3 ஆக பிரிக்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய செவிலியர், தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத்துறை ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். பின்னர் அவர் சுகாதாரத்துறை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்திற்கு மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி, பொதுச்செயலாளர் அன்புச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் சட்டசபை அருகே சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை பேரிகார்டு வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் சுகாதாரத்துறை செயலாளரிடம் செல்போனில் பேசினர். அப்போது அவர் தற்போது தலைமை செயலகத்தில் இல்லை எனவும், நாளை காலையில் சுகாதாரத்துறை ஊழியர்களை சந்தித்து பேசுவதாகவும் கூறினார். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story