சுகாதார ஊழியர்கள் முற்றுகை போராட்டம்


சுகாதார ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
x

இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசிய கிராமப்புற சுகாதார இயக்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசிய கிராமப்புற சுகாதார இயக்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை

தேசிய கிராமப்புற சுகாதார இயக்ககத்தில் நர்சு, மருந்தாளுனர், உதவியாளர் என மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் சுமார் 750 பேர் பணியாற்றி வருகிறார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

அவர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டும், தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று மாலை அவர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பளத்தை உயர்த்த...

அவர்களுடன் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பளத்தை உயர்த்தி கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அதேநேரத்தில் பணிநியமனம் தொடர்பாக அரசுதான் முடிவெடுக்வேண்டும் என்றும், இதற்கு நியமன விதிகளை திருத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக அரசிடம் முறையிடுங்கள் என்று கூறினார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட தேசிய கிராமப்புற சுகாதார இயக்க ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story