தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை


தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
x

குடும்ப பிரச்சனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மூலக்குளம்

மூலக்குளம் அடுத்த அரும்பார்த்தபுரம் வாய்க்கால் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). டிரைவர். அவரது மனைவி கனகராணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு கனகராணி குழந்தைகளுடன் அருகில் உள்ள தனது தோழி வீட்டுக்கு சென்றார். இருப்பினும் சுரேஷ் அங்கு சென்று தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவா் மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சுரேஷ் வீட்டின் இரும்பு பைப்பில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story