பணம், செல்போன் முதியவரிடம் ஒப்படைப்பு


பணம், செல்போன் முதியவரிடம் ஒப்படைப்பு
x

காரைக்கால் பஸ் நிலையத்தில் தவறவிட்ட பணம், செல்போனை போலீசார் முதியவரிடம் ஒப்படைத்தனர்.

காரைக்கால்

காரைக்கால் பஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கேட்பாரற்று ஒரு கைப்பை கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி திறந்து பார்த்தபோது அதில் 40 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 3 செல்போன்கள் மற்றும் ஆதார் கார்டு இருந்தன.

இதையடுத்து அவற்றை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று, ஆதார்கார்டில் உள்ள முகவரியை வைத்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பையை தவறவிட்டவர் சென்னையை சேர்ந்த துரைராஜ் (வயது 64) என்பது தெரியவந்தது. இருப்பினும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர் விசாரணையில் அவர், வேளாங்கண்ணி ஆலயம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடி கண்டுபிடித்து, காரைக்கால் அழைத்துவந்து பணம் மற்றும் செல்போனை ஒப்படைத்தனர். அவர் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். கேட்பாரற்று கிடந்த பணம் மற்றும் செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணிஷ் பாராட்டினார். போலீசாரின் நேர்மைக்கு சமூக வலைதளத்தில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Next Story