கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் தமிழிசை
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,விநாயகர் சதுர்த்தி, நாடு முழுவதும் பாரம்பரிய உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் விழாவாக இருந்து வருகிறது. விநாயகக் கடவுள் அறிவின், ஞானத்தின், வளமையின் கடவுளாக பார்க்கப்படுகிறது. எந்த ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும் போதும் விநாயகரை வணங்கி தொடங்கப் படுகிறது.
இந்த விநாயகர் சதுர்த்தி விழா அனைவரது வாழ்விலும் ஆரோக்கியத்தையும், அமைதியையும், செழிப்பையும் அளிக்க வேண்டும் என்று கூறி புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனதுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.
ரங்கசாமி
முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,வினைத் தீர்க்கும் விநாயகப் பெருமானைப் போற்றி வழிபடும் இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாள் அறிவு, கல்வி, செல்வம், ஆரோக்கியம் போன்றவற்றை அருளும் திருநாளாக அமையட்டும் என்று கூறி புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்' என தெரிவித்துள்ளார்.