திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் யானைக்கு கஜ பூஜை


திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் யானைக்கு கஜ பூஜை
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் யானைக்கு கஜ பூஜை நடந்தது.

காரைக்கால்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் யானைக்கு கஜ பூஜை நடந்தது.

சனீஸ்வரர் கோவில்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகப்புகழ் மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி 2½ ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கஜ பூஜை

இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயக சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை யொட்டி சொர்ண கணபதிக்கு தங்க கவசமும், உடன் அமைந்துள்ள விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரமும் அணிவிக்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.

இதைத்தொடர்ந்து கோவில் யானையான பிரக்ருதிக்கு கஜ பூஜை செய்து, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம்

இதற்கிடையே மலையாள திரைப்பட நடிகர் மோகன்லாலின் மனைவி சுசித்ரா மற்றும் அவரது சகோதரர் அவ்ரா, அவரது மனைவி ரோசி ஆகியோர் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story