கல்லணையில் இருந்து காரைக்காலுக்கு காவிரிநீர் வந்தது


கல்லணையில் இருந்து காரைக்காலுக்கு காவிரிநீர் வந்தது
x

கல்லணையில் இருந்து காவிரிநீர் காரைக்காலுக்கு வந்தடைந்தது. பாசனத்திற்காக உடனே தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காரைக்கால்

கல்லணையில் இருந்து காவிரிநீர் காரைக்காலுக்கு வந்தடைந்தது. பாசனத்திற்காக உடனே தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காரைக்காலுக்கு வந்த காவிரிநீர்

மேட்டூ்ர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரிநீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லணை வந்தடைந்தது. இதையடுத்து டெல்டா மாவட்ட விவசாய பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இ்ந்த தண்ணீர் கடைமடைப்பகுதியான காரைக்காலுக்கு நேற்று வந்தது. காரைக்காலுக்கு வந்த தண்ணீரை, விவசாய பயன்பாட்டுக்காக உடனே திறந்துவைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தண்ணீர் திறப்பு

இதைத்தொடர்ந்து இன்று காலை நல்லம்பல் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.சிவா, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் மகேஷ், சிதம்பரநாதன் மற்றும் துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த தண்ணீரின் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story