'நீட்' தேர்வுக்கு இலவச பயிற்சி


நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி
x

புதுவையில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க எதி்ர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கி, ஏழை நடுத்தர மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை பறித்துள்ளது. எனவே தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் 'நீட்' தேர்விற்கு விலக்கு பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. இதற்கு அரசு செவிசாய்க்கவில்லை.

புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்போது நீட் தேர்வுக்கு பயிற்சி நடந்து வருகிறது. அதுவும் வல்லுனர்களை கொண்டு பயிற்சி அளிக்காமல் அந்த பள்ளி ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக செலவு செய்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக நகரத்தில் மேலும் ஒரு நீட் பயிற்சி வகுப்பை தொடங்க வேண்டும்.

அதேபோல் பாகூர், வில்லியனூர், நெட்டப்பாக்கம், திருக்கனூர் ஆகிய கிராமப்புற பகுதிகளிலும் சிறப்பு ஆசிரியர்களை கொண்டு நீட் தேர்வுக்கு இலவச பயிற்சியை அளிக்க வேண்டும். குறிப்பாக அரசுப்பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களாவது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்பதை இலக்காக கொண்டு கல்வித்துறை செயல்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story