மாகியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, போதை மாத்திரை விற்பனை
மாகியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாகி
மாகியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ரோந்து
புதுவை மாநிலம் மாகி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பந்தக்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த 2 பேர் போலீசாரை கண்ட உடன் ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பள்ளூரை சேர்ந்த முகமது மசீத் (வயது 27), அல்தாப் (41) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கர்நாடகாவில் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகளை வாங்கி வந்து அதனை கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
கைது
உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா, 380 கிராம் எடையுள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் மங்களூரூ விரைந்து சென்று அவர்கள் இருவருக்கும் கஞ்சா சப்ளை செய்த முகமது பர்தீன் (21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 கிராம் கஞ்சா, டிஜிட்டல் எடை எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் முகமது மசீத் உள்பட 3 பேரையும் போலீசார் மாகி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.