பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட கலந்தாய்வு
காரைக்காலில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது.
காரைக்கால்
காரைக்காலில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது.
இறுதிகட்ட கலந்தாய்வு
காரைக்கால் மாவட்டத்தில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான (சி.பி.எஸ்.சி.) இறுதி கட்ட கலந்தாய்வு, காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்தது.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், எந்த பள்ளியிலும் சேராத மாணவர்கள் மற்றும் கடந்த ஜூலை மாதம் நடந்த துணை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த கலந்தாய்வில் மொத்தம் 219 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சேர்க்கை ஆணை
அவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் விருப்பப்படும் பள்ளிகளுக்கு சேருவதற்கான ஆணை வழங்கப்பட்டது. மாவட்ட மேல்நிலைப்பள்ளி துணை இயக்குனர் ராஜேஸ்வரி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார்.
இந்த கலந்தாய்வில் தலத்தெரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் ஜெயா உள்பட பல்வேறு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கலந்தாய்வு பணிகளை மாவட்ட பயிற்சி கலெக்டர் சம்யக்ஜெயின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.