பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதலனை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அரியாங்குப்பம்

காதலனை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கல்லூரி காதல்

அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் வீரராஜ் (வயது 56). இவர் அபிஷேகப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கலைச்செல்வி ( 26). பட்டப்படிப்பு படித்துள்ளார்.

இவர், தன்னுடன் படித்த கல்லூரி மாணவர் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கலைச்செல்வி தான் காதலிக்கும் நபரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பெற்றோரிடம் கூறினார்.

தற்கொலை

இதையடுத்து கலைச்செல்வியின் பெற்றோர், மகளின் காதலன் வீட்டுக்கு சென்று திருமணம் குறித்து பேசினர். ஆனால் அவர்கள், மகனின் காதல் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் கலைச்செல்வி ஏமாற்றம் அடைந்தார்.

உயிருக்கு உயிராக தான் காதலித்தவரை கரம் பிடிக்க முடியாத விரக்தியில் இருந்த கலைச்செல்வி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் விரைந்து சென்று கலைச்செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

மகள் தற்கொலை செய்துகொண்டது குறித்து வீரராஜ் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story