டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்


டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
x

திருபுவனை அருகே இலவச மின்சாரத்துக்கு டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருபுவனை

இலவச மின்சாரத்துக்கு டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிஜிட்டல் மின் மீட்டர்

புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு, மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்படுமோ? என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

இந்தநிலையில் திருபுவனை தொகுதி கலித்தீர்த்தாள்குப்பம் பகுதியில் இலவச மின்சாரம் பயன்படுத்தும் வயல்களில் மின்துறை டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் பணியை தனியார் நிறுவனம் மூலம் இன்று மேற்கொண்டனர்.

விவசாயிகள் போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த விவசாயிகள் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அவர்கள் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் பணியை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இதற்கிடையே புதுச்சேரியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் டிஜிட்டல் மின் மீட்டரை பொருத்தி விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்ற போக்கை கடைப்பிடிப்பதாக கூறி விவசாயிகள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ரவி தலைமையில் விவசாயிகள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story