ஏனாம் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மீன்
ஏனாம் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை மீன் ரூ.12 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.
ஏனாம்
புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ளது. இங்கு கோதாவரி ஆறு கடலில் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் அதிக அளவில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. இந்த கழிமுக பகுதியில் புலசா என்ற மருத்துவ குணம் கொண்ட மீன் அவ்வப்போது பிடிபடும். அதை போட்டி போட்டு வியாபாரிகள் வாங்கிச்செல்வர்.
அதேபோல பாண்டு கப்பா என்ற மீனும் அரிதாக எப்போதாவதுதான் பிடிபடும். சுவை மிகுந்த இந்த மீனையும் அப்பகுதி மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்தநிலையில் இன்று பொன்னாட வரதம் என்ற மீனவர் வலையில் பாண்டு கப்பா மீன் சிக்கியது. சுமார் 20 கிலோ எடையுள்ள அந்த மீன் ரூ.12 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
Related Tags :
Next Story