செல்போன், லேப்டாப் திருடிய ஊழியர் கைது
புதுச்சேரி நயினார்மண்டபம் அருகே செல்போன், லேப்டாப் திருடிய விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி
புதுச்சேரி நயினார்மண்டபம் காவேரி நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் பிரவீன்குமார் (வயது 36). புதுச்சேரி 100 அடி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இங்கு கடந்த 3 மாதங்களாக திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது யாசின் (34) என்பவர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர், அங்கிருந்த ஒரு செல்போன், லேப்டாப், 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றுவிட்டார்
இது குறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்த நிலையில் முகமது யாசின், சிதம்பரம், அம்மாபேட்டை, புத்துகோவில் தெருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப், ரூ.5 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்டடில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.