எலக்ட்ரீசியன் தற்கொலை


எலக்ட்ரீசியன் தற்கொலை
x

புதுவை வினோபா நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் குடும்ப தகராறு காரணமாக துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

புதுவை வினோபா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 45). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஸ்டெல்லா (40). இந்த நிலையில் மோகன் சரியாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு மோகன் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த அவரது மனைவி கண்டித்தார். இதில் மனமுடைந்த மோகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story