மின்துறை ஊழியர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்


மின்துறை ஊழியர்கள்   2-வது நாளாக உண்ணாவிரதம்
x

தனியார் மயத்தை கண்டித்து மின்துறை ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

தனியார் மயத்தை கண்டித்து மின்துறை ஊழியர்கள் இன்று 2-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக உண்ணாவிரதம்

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மின்துறை தனியார் மயத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மின்துறை பொறியாளர், தொழிலாளர்கள் தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழுவை அமைத்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நேற்று அவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இன்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு குழுவின் தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார்.

தற்செயல் விடுப்பு

போராட்டத்தில் பொருளாளர் செந்தில்குமார், பொதுச்செயலாளர் வேல்முருகன், இளங்கோவன், சாந்துராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மண்டலம் 2,3,6,7,8,10 பிரிவு ஊழியர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பொறியாளர்களும், வருகிற 13-ந் தேதி மண்டலம்-4 பிரிவு ஊழியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.


Next Story