தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
புதுச்சோியில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி
புதுச்சேரி சண்முகாபுரம் இந்திராகாந்தி வீதி குடியிருப்பை சேர்ந்தவர் ரவி (வயது 43). மினி லாரி டிரைவர். இவரது மனைவி சாவித்திரி. குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு ரவி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். நேற்று அவர் தனது மனைவிக்கு போன் செய்துள்ளார். அப்போது அவர் கோபத்தில் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ரவி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story