பெட்ரோல் குண்டு போட்றாதீங்க.. நகைச்சுவையாக பேசிய கவர்னர் தமிழிசை


பெட்ரோல் குண்டு போட்றாதீங்க.. நகைச்சுவையாக பேசிய கவர்னர் தமிழிசை
x
தினத்தந்தி 31 Oct 2023 2:01 PM IST (Updated: 31 Oct 2023 2:11 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் ஆரோக்கியமான சூழல் வேண்டும் என்றும், பிரச்சனை என்றால் தன்னிடம் நேரில் வந்து பேசலாம் என்றும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதய நாள் விழா நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். விழாவில் கலைஞர்களுடன் இணைந்து காஷ்மீரின் பாரம்பரிய நடனமாடினார்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எனக்கு யாராலும் பாதுகாப்பற்ற நிலை வராது. புதுவையில் பதவியேற்றவுடன் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தது. அனைத்தையும் எடுக்கும்படி கூறினேன். இதனால் பாதுகாப்புக்கு இருந்த மத்திய பாதுகாப்பு படை சென்றது. ஓரடுக்கு பாதுகாப்பு மட்டும் இருந்தது. என் பாதுகாப்பை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்.

கவர்னர் மாளிகை எதிரே உள்ளது பொதுமக்களுக்கான சாலை. அதனால்தான் திறந்துள்ளோம். எதிர்க்கட்சியினர் பாதுகாப்பு தடுப்புகளை எடுக்கும்படி கூறிவிட்டு, இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.

'பிரச்சனை என்றால் என்னிடம் நேரில் வந்து பேசுங்கள். புதுவையில் ஆரோக்கியமான சூழல் வேண்டும். தடுப்புகள் இல்லாததால் இங்கு பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள்' என்றும் நகைச்சுவையாக கூறினார்.


Next Story