தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா
பாகூாில் தி.மு.க சாா்பில் சமத்துவ ெபாங்கல் விழா ெகாண்டாடப்பட்டது.
பாகூர்
பாகூர் மூலநாதர் கோவில் அருகில் மாநில தி.மு.க. சார்பில் சங்கமம் கலைவிழாவோடு சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவில் மூலநாதர் கோவில் குருக்கள் பாபு, அருட்தந்தை பெர்க்மான்ஸ் பீட்டர், பள்ளிவாசல் முத்தாவல்லி சமியுல்லா முன்னிலையில் 320 பெண்கள் சமத்துவப் பொங்கலிட்டனர்.
மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சங்கமம் கலை விழாவில், இயல், இசை, நாடகக் கலைஞர்களை ஒன்றிணைத்து, ஆஞ்சநேயர் சிலம்பம், மல்லர் கம்பம், மரக்கால் ஆட்டம், சூரமங்கலம் கும்மிப்பாட்டு, உடுக்கை பம்பை, கரகாட்டம், பறையாட்டம், தப்பாட்டம், குயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிராமிய இசைக்கலைஞர் சித்தன் ஜெயமூர்த்தி தலைமையிலான குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் தி.மு.க. மாநில அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், மணவெளி தொகுதி சன்.சண்முகம் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.