தமிழர் மீண்டும் ஜனாதிபதியாவதை தடுத்தது தி.மு.க., காங்கிரஸ்


தமிழர் மீண்டும் ஜனாதிபதியாவதை தடுத்தது தி.மு.க., காங்கிரஸ்
x

தமிழர் மீண்டும் ஜனாதிபதியாவதை தி.மு.க, காங்கிரஸ் கூட்டு சேர்ந்து தடுத்தது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி

தமிழர் மீண்டும் ஜனாதிபதியாவதை தி.மு.க, காங்கிரஸ் கூட்டு சேர்ந்து தடுத்தது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பச்சை தமிழர்

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்து விடும். தமிழர்கள் பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு தி.மு.க.வால் தான் மறுக்கப்பட்டது என்பதை தான் உள்துறை மந்திரி அமித்ஷா தெளிவாக கூறியிருந்தார்.

வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு தி.மு.க.வின் பங்கு இருப்பதாக அவர் கூறியதை தி.மு.க.வினர் சுற்றி வளைத்து எப்படி கூறினாலும் அதில் உள்ள உண்மையை மறைக்க முடியாது. தமிழர் பிரதமராக வருவதை மறுத்தார்கள், தடுத்தார்கள் என்பது மட்டுமல்ல, தமிழர் மறுபடியும் ஜனாதிபதியாக வருவதையும் (அப்துல் கலாம்) தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து தடுத்தது என்பதும் மறுக்கப்படாது. மறைக்கவும் படக்கூடாது.

சரித்திரம் மறைக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களின் குற்றத்தை நேரடியாக எடுத்துச்சொல்லும் போது சரித்திரத்தை மறைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏதோ சொல்கிறார். அதை ஒரு கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி அளவுக்கு யாரும் தமிழை கையாண்டது கிடையாது. பச்சை தமிழராகவே பிரதமர் மோடி பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழ் புறக்கணிக்கப்படாது என நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம். தமிழை பேசுவது மட்டுமல்ல, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தமிழை அரியணையில் ஏற்றுவதற்கு தான் அத்தனை முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறோம். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கற்றால் நமது மாணவர்களின் ஆற்றல் அதிகரிக்கும்.

அது போட்டி தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவதற்கும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும், எல்லா சவால்களையும் சமாளிப்பதற்கும் உறுதுணையாக இருக்கும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வந்து புதுவையில் புரட்சியை ஏற்படுத்தி விடப்போகின்றார்களே என்ற ஒரு ஆதங்கத்தில் எதிர்க்கட்சியினர் பலவற்றை கூறுகின்றனர். தமிழ் புறக்கணிக்கக்கூடாது என்பதில் அவர்களை விட எங்களுக்கு அதிக அக்கறை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

----


Next Story