பேரிடர் மேலாண்மை பயிற்சி


பேரிடர் மேலாண்மை பயிற்சி
x

காமராஜர் மணி மண்டபத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி

லாஸ்பேட்டை காமராஜர் மணி மண்டபத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனம் சார்பில் புயல், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சியின்போது பேரிடர் மேலாண்மை சப்-கலெக்டர் தமிழ்செல்வன், துறை தாசில்தார்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story