பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்


பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
x

திருநகா் மாரியம்மன் கோவில் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

காரைக்கால்

காரைக்கால் நகர் பகுதியான திருநகர் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காரைக்கால் மதகடி உஜ்ஜய்னி மகாகாளியம்மன் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story