கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு


கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
x

ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது

அரியாங்குப்பம்

ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், உற்சவ விழா உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் அரியாங்குப்பம் அடுத்துள்ள வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். சப்த கன்னிகளுக்கு விளக்கேற்றியும் வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் அரியாங்குப்பம் போலீஸ் சார்பில் பக்தர்களை ஒழுங்கு படுத்தினர். மாலையில் கடற்கரையில் பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story