ரூ.14 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்


ரூ.14 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 18 Oct 2023 8:42 PM IST (Updated: 18 Oct 2023 9:20 PM IST)
t-max-icont-min-icon

ராஜ்பவன் தொகுதியில் ரூ.14 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

ராஜ்பவன் தொகுதியில் ரூ.14 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுமை கட்டிடம்

புதுவை கடற்கரை சாலையில் பழைய கலங்கரை விளக்கம் அருகே கலை பண்பாட்டு துறைக்கு சொந்தமான புதுமை கட்டிடம் உள்ளது. இங்கு கைவினை பொருட்கள் விற்பனை நடைபெற்று வந்தது.

இந்த கட்டிடம் சேதமடைந்துள்ளதால் முழுமையாக இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி செலவில் புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கான பணியை பூமி பூஜை செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

சாலை பணிகள்

மேலும் ராஜ்பவன் தொகுதியில் 22.675 கி.மீ. நீளமுள்ள தார் மற்றும் சிமெண்டு சாலைகள் ரூ.10 கோடியே 83 லட்சம் செலவில் சீரமைக்கப்பட உள்ளது. அதாவது 45 சாலைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணிகளையும் பழைய சாராய ஆலை அருகே நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.14 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித்துறை செயலாளர் மணிகண்டன், தலைமை பொறியாளர் பழனியப்பன், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் வேல்முருகன், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மேலாளர் சீனு.திருஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story