டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது
நலவழித்துறை அதிகாரிகளின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளதாக நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் கூறியுள்ளார்.
காரைக்கால்
நலவழித்துறை அதிகாரிகளின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளதாக நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் கூறியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பருவமழை காலத்தில் ஏற்படும் நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நலவழித்துறை எடுத்து வருகிறது.
அதன்படி டெங்கு தடுப்பு பணிகளில் நலவழித்துறை நோய்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் தேனாம்பிகை, தொழில்நுட்ப உதவியாளர் சேகர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் சிவ வடிவேல் மற்றும் சுகாதார உதவியாளர்கள் கொண்ட ஒரு குழுவும், தொழில்நுட்ப உதவியாளர் சேதுபதி மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் ஆண்ட்ரூஸ், சுகாதார உதவியாளர்கள் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் காரைக்கால் நகர்ப்புற பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
டெங்கு கட்டுக்குள் உள்ளது
குறிப்பாக பருவமழை காலத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு, கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற நோய் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
காரைக்காலில் இந்த மாதம் சிலருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நலவழித்துறை எடுத்த தீவிர நடவடிக்கையால் தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.