பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

காரைக்காலில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில், தங்கள் அமைப்பின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியதை கண்டித்து நேற்று காரைக்கால் கடற்கரை சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பத்ருதீன் தலைமை தாங்கினார். இதில் மயிலாடுதுறை மாவட்ட பேச்சாளர் நவாஸ் கான், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story