இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரக் கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாவாணர் நகர் கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் சிந்தாமணி, உழவர்கரை தொகுதி செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் நளவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஞானவேல், அஞ்சலிதேவி, பாண்டியன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாவாணர் நகரில் 40 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். குடிசைமாற்று வாரிய இடத்தில் குழந்தைகள், முதியவர்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story