திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

புதுச்சேரியில் திராவிடர் விடுதலை கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி

புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மின்துறை தனியார் மயம், கேசினோ சூதாட்ட விடுதிக்கு தடை விதிக்கக்கோரி அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக்கழக தலைவர் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகி விஜயசங்கர் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், தமிழர் களம் நிர்வாகி அழகர், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மின்துறை தனியார் மயம், சூதாட்ட விடுதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story