கடலில் மிதந்து வந்த ஆண் பிணம்


கடலில் மிதந்து வந்த ஆண் பிணம்
x

காரைக்கால் மீன்பிடி துறைமுக பகுதி கடலில் ஆண் பிணம் மிதந்து வந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால்

காரைக்கால் மீன்பிடி துறைமுக பகுதி கடலில் ஆண் பிணம் மிதந்து வந்தது. அதை அங்கு காவலராக பணிபுரியும் ஜோதிமணி கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நிரவி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஆண் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. துறைமுகத்தில் இறங்கும் போது, கால்தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story