ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுவையில் புதிதாக 11 பேருக்கு கொரோன பாதித்துள்ள நிலையில் 36 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி
புதுவையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,158 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 11 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 6 பேர் புதுச்சேரியையும், 5 பேர் காரைக்காலையும் சேர்ந்தவர்கCorona infection affects 11 people in a single dayள் ஆவார்கள்.
இன்று 4 பேர் குணமடைந்தனர். தற்போது புதுவையில் 17 பேர், காரைக்காலில் 5 பேர், ஏனாமில் 14 பேர் என 36 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 89 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 580 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 122 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 127 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.