செங்கழுநீர் அம்மன் கோவிலில் முன் மண்டபம் கட்டும் பணி


செங்கழுநீர் அம்மன் கோவிலில் முன் மண்டபம் கட்டும் பணி
x

செங்கழுநீர் அம்மன் கோவிலில் முன் மண்டபம் கட்டும் பணிக்காக ரூ.7 லட்சட்த்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

அரியாங்குப்பம்

வீராம்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோவிலில் முன் மண்டபம் கட்டுமானப் பணிக்காக சுமார் ரூ.13 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.7 லட்சத்திற்கான காசோலை கோவில் அறங்காவல் குழு தலைவர் பரமானந்தன் முன்னிலையில், அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ, பாஸ்கர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவல் குழுவினர், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story