கட்டுமான பொருட்கள், ஸ்கூட்டர் எரிந்து நாசம்
வில்லியனூர் அடுத்த வி.மணவெளி கிராமத்தில் காலிமனையில் வைத்திருந்த கட்டுமான பொருட்கள், ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
புதுச்சேரி
வில்லியனூரை அடுத்த வி.மணவெளியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது51). கட்டுமான தொழிலாளி. இவருக்கு சொந்தமான வி.மணவெளி பாரதிதாசன் நகரில் உள்ள காலிமனையில் கட்டுமான பணிக்கு தேவையான பலகைகள், சவுக்கு கம்புகளை வைத்திருந்தார். சம்பவத்தன்று நள்ளிரவு காலிமனையில் இருந்த பலகைகள், சவுக்கு கம்புகள் தீப்பிடித்து எரிந்தது.
அப்போது அதே பகுதியை சேர்ந்த அமுதவள்ளி என்பவருக்கு சொந்தமான ஸ்கூட்டரும் தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் வேலாயுதம் புகார் அளித்தார். அதன்பேரில் பலகைகள், சவுக்கு கம்புகள், ஸ்கூட்டருக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story