மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மருந்து கடைக்காரர் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மருந்து கடைக்காரர் சாவு
x

புதுச்சேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மருந்து கடைக்காரர் உயிரிழந்தார்

புதுச்சேரி

புதுவை முத்தியால்பேட்டை வசந்தம் நகர் கங்கை வீதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 65). இவர் மிஷன் வீதியில் மருந்துகடை வைத்துள்ளார். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மருந்து கடைக்கு வந்துகொண்டிருந்தார். பாரதி வீதி அருகே வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தட்சிணாமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தட்சிணாமூர்த்தி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story